என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள் சமூகப்பணி
என். ஜி. எம் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. மாணிக்கச்செழியன் அவர்கள் மற்றும் சமூகப் பணித்துறையின் தலைவரான முனைவர் எல்.இரஞ்சித் அவர்களின் வழிகாட்டுதலின் படி சமூகப்பணித்துறைமாணவர்களான விஷ்ணு, ஜாக்சன் டேனியல், சஞ்சித், தியாசினி மற்றும் இலக்கியா ஆகியோர் பொள்ளாச்சி மரப்பேட்டையில் அமைந்துள்ள "ஹெல்பிங் ஹார்ட்ஸ்" முதியோர் இல்லத்தில்
"இசையும் இன்பமும்" என்ற தலைப்பில்
நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.
இந்த நிகழ்வில் அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் வகையில் விளையாட்டு, நடனம், இசை நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன. மேலும் என். ஜி. எம் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பாக அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டு உற்சாகப்படுத்தப் பட்டனர்.
No comments