மாமர விவசாயத்தில் சாதிக்கும் பொள்ளாச்சி விவசாயி
பொள்ளாச்சி
மாமர விவசாயத்தில் 1 ஏக்கரில் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டி பொள்ளாச்சி விவசாயி சாதனை படைத்துவருகிறார்.
பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களிடம் கோரிக்கை வைத்து காத்திருக்கும் நிலையில் உள்ளோம். இதனால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய அச்சப்பட்டு விவசாயத்தை கை விட்டுவருகின்றனர்.
பாரம்பரியமாக
விவசாயம் செய்து வந்தவர்களின் வாரிசுகள் மாற்றுத்தொழில்களை
செய்துவருகின்றனர். விவசாய நாட்டில் விவசாய விளை பொருட்களுக்கு
கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் பெரிய குறையாக
இருந்துவருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதியை சேர்ந்தவ விவசாயி வீரமணி மாமர விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டிவருகிறார். பொள்ளாச்சி அடுத்த செணாம்பதியில் தனக்கு உள்ள சில ஏக்கர் நிலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாமர விவசாயம் செய்துவருகிறார் விவசாயி வீரமணி.
பொள்ளாச்சி என்றால் தென்னை மரங்கள்தான்
என்ற நிலையில் தனது நிலத்தில் தென்னை மரத்தை
தவிர்த்து 35 ஆண்டுகளுக்கு முன் பு மாமர கன்றுகளை நடவு செய்து அதை தனது பிள்ளைகளைப்போல் பராமரித்து வளர்த்தார்.
மாமர விவசாயத்தில் போதிய வருவா
ய் கிடைக்காது என பல விவசாயிகளு ம் கருதி தென்னை மர விவசாயம் செ ய்துவரும் பகுதியில் மாற்றாக நம்பிக்கையுடன் மாமர கன்றுகளை நடவு செய்தார்.
சொட்டு நீர் வா யிலாக நீர் பாய்ச்சி வந்தார். மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மா மர
கன்றுகள் ஓரளவு வளர்ந்து மகசூல் தர துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு மரத்தில்
சில கிலோ அளவிற்குத்தான் மாம்பழங்கள் கிடைக்க துவங்கியது. ஆனால்,
துவண்டுவிடாமல் தனது மாமரங்களை நோய் தாக்குதல், வறட்சி போன்றவற்றில்
இருந்து பாதுகாத்து வளர்த்து வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும்
மாமரங்கள் தரும் மகசூலின் அளவு அதிகரித்து கொண்டே சென்றது. 10 ஆண்டுகள்
வயதை மாமரங்கள் கடந்த பிறகு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 50
ஆயிரத்திற்கும் மேல் வருவாயை கொடுத்தது. தொடர்ந்து வீரமணியின்
முயற்சியால் ஒரு ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை வருவாய் கிடைத்தது.
தென்னை
மரங்களில் கிடைக்கும் வருவாயை விட மாமரத்தில் அதிக வருவாயை தற்போது
ஈட்டிவருகிறார். தனது தோட்டத்தில் அல்போன்சா, பங்கனபள்ளி, செந்தூரா,
இமாம்பால், மல்லிகா போன்ற ரக மரங்களை வளர்த்துவருகிறார். ஒரு ஏக்கருக்கு
140 மாமரங்களை நடவு செய்துள்ளார்.
தான் விவசாயம் செய்து லாபம் ஈட்டி
வருவதுடன் பல விவசாயிகளுக்கு வழிகாட்டுதலும் வழங்கிவருகிறார். ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாம்பழ அறுவடை செய்கிறார்.
விவசாயி
வீரமணி கூறுகையில், பெரும்பாலான விவசாயிகள் தென்னை மரத்திற்கு
முக்கியத்துவம் தருவதுபோல் மாமரத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.
மாமரத்திற்கு முக்கியத்துவம் தந்து முறையாக பராமரித்து வளர்த்தால்
ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு பராமரிப்பை பொருத்து ரூ.50 ஆயிரம் முதல் 75
ஆயிரத்திற்கும் மேல் உறுதியாக வருவாய் கிடைக்கும். மாமர விவசாயத்தில்
அனுபவம் கிடைத்துவிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையும் வருவாய்
ஈட்டும் வாய்ப்புள்ளது.
அல்போன்சா உள்ளிட்ட சில ரக
மாம்பழங்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. அல்போன்சா மாம்பழம்
ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 300 வரை
விற்பனை செய்யமுடியும். பங்கனபள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் 140 வரை
விற்பனை செய்யமுடியும்.
செந்தூரா கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 90 வரை
விற்பனை செய்யமுடியும். இந்த விலைகள் நாம் தேர்வு செய்யும் வியாபாரிகள்
மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு போன்றவற்றை பொருத்து மாறுபடும். மாமரத்தின்
கன்றை நடவு செய்து விட்டு தண்ணீர் பாய்ச்சாமல், பராமரிக்காமல் விட்டால்
மகசூல் கிடைக்கும் காலமும் தாமதம் ஆகும், விளைச்சலும் குறையும், இதனால்
வருவாயும் குறையும்.
அதேபோல், ஏற்றுமதி வாய்ப்புள்ள
ரகங்களையும், மார்க்கெட்டில் நன்கு விற்பனையாகும் ரகங்களையும் தேர்வு
செய்து நடவு செய்யவேண்டும். இதை விவசாயிகள் முறையாக கடை பிடித்தால் மாமர
விவசாயம் என்பது சிறந்த லாபம் தரும் என்பதில் ஐயமில்லை என்றார்.


No comments