Breaking News

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சீனியர் சிட்டிசன்கள் போராட்டம்



பொள்ளாச்சி,ஜன.7-
மூத்த குடிமக்கள் குடியிருப்பை விற்பனை செய்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் சீனியர் சிட்டிசன்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி அடுத்த புரவிபாளையம் பகுதியில் சீனிவாசா பாம்ஸ் என்ற சீனியர் சிட்டிசன்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான வீடுகளில் சீனியர் சிட்டிசன்கள் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கு ஸ்டெப் ஸ்டோன் என்ற நிறுவனம் வீடுகளை பல்வேறு வாக்குறுதிகளை கூறி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், வாக்குறுதிகள் கொடுத்த அடிப்படையில் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் அங்கு சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்த கட்டப்பட்ட உணவு விடுதி, நூலகம் போன்ற கட்டிடங்களை விற்பனை செய்த நிறுவனத்தின் இயக்குனர் பெயரிலேயே வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

அங்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக கூறியுள்ளனர். இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை வருவாய்த்துறை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அவர்களது வேதனையாக உள்ளது. 

இதனால், செவ்வாய்க்கிழமை காலை தங்களது குடியிருப்பு பகுதியில் மூத்த குடிமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மூத்த குடிமக்களுக்கு அதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தங்களை மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

No comments