இஸ்ரோவின் பதிவு செய்யப்பட்ட பயிற்சி மையமான பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட்
இஸ்ரோவின் பதிவு செய்யப்ப்டட பயிற்சி மையமாக பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் வளமான அறிவைப் பரப்புவதை உறுதி செய்வதில் இஸ்ரோ துடிப்பான பங்கை வகிக்கிறது. இந்தச் சூழலில், அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கைகோர்த்து, தங்கள் சொந்த கட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அங்கு மாணவர்கள் விண்வெளி ஆசிரியர்களுடன் பதிவு செய்து, புத்தகங்கள் மற்றும் ஆய்வகப் பணிகள் கொண்ட தொகுதிகள் மூலம் விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த வகையில் பூசாரிப்பட்டியில் செயல்பட்டுவரும் பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி "இஸ்ரோவின் பதிவுசெய்யப்பட்ட விண்வெளி பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி கல்வியை ஊக்குவிப்பதற்கும் மாணவர் சமூகத்திற்கு விழிப்புணர்வு திட்டங்களை வழங்குவதற்கும் இந்த கல்வி நிறுவனம் தயாராக உள்ள தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இஸ்ரோவின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையமாக இந்த நிறுவனம் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி தனபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments