ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று
ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.
இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. மேலும் ஆங்காங்கே மரக்கிளைகளும் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதும் மரம் விழுந்ததால் கார் முழுவதும் சேதம் அடைந்தது. அதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மிகப்பெரிய மரம் ஒன்று விழுந்ததில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
No comments