ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பொள்ளாச்சி காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும். கூட்டத்தில் 22 புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் இதர பதவி வைப்பவரின் பெயர்கள் பின்வருமாறு.
ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் சார்பாக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதற்காக தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதி உதவி கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
மேலும் சங்கத்தில் ஓய்வு பெற்ற காவலர்கள் முதல் அதிகாரி வரை உள்வர்களை சங்கத்தில் இணைப்பதற்கு அனைவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது
முடிவில் சங்கத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர் (PRO)
மைக்கேல் சகாயராஜ்
அவர்கள் நன்றி கூறினார்.
No comments