Breaking News

4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான்




புற்று நோயாளிகளுக்கு நிதி உதவி செய்யவும் ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
 பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மிராக்கிள் ஹெல்த் சென்டர் செயல்பட்டு வருகிறது.இங்கு அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, சித்தா உள்ளிட்ட மருத்துவங்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிதி திரட்டும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை மிராக்கிள் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 10 கி.மீ., 5 கி.மீ., 2 கி.மீ., என  பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது
 டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் துவங்கி பல்லடம் சாலை வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. 4000க்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
 போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சக்தி குழுமத்தலைவர் ம.மாணிக்கம் பரிசுகளை வழங்கினார். உடன் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்ரமணியன், அத்லடிக் அசோசியேசன் நிர்வாகி சீனிவாசன், டாக்டர் மகாலிங்கம் கல்லூரி  முதல்வர் கோவிந்தசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முதல்வர் அசோக், திட்ட அலுவலர் நாகராஜன் உட்பட பலர் இருந்தனர்.




No comments