நகராட்சி நியமன உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முகாம்
பொள்ளாச்சி : டிச-21
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மருத்துவச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மருத்துவர்களை அனுகி மருத்துவ சான்று பெறுவது வழக்கம்.
தற்சமயம் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவமனையில் ஒரு அறை ஒதுக்கி
மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்குமாறு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜாவிடம் தற்சமயம் அரசு நியமித்துள்ள பொள்ளாச்சி நகராட்சி நியமன உறுப்பினரும் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினருமான முருகானந்தம் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்று பெற்றனர்.
முகாமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் .ராஜா தொடங்கி வைத்தார்.
அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். கார்த்திகேயன்.ஆர்த்தோ டாக்டர். அருண்குமார்உள்ளிட்ட மருத்துவர்கள்
பொள்ளாச்சி நகராட்சி நியமன உறுப்பினர் மு .முருகானந்தம்.நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments