விளையாட்டு போட்டிகளில் ஏஆர்பி பள்ளி சாதனை
பொள்ளாச்சி அடுத்த ஜமீன்முத்தூர் ஏஆர்பி இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றனர்.
கோ-கோ விளையாட்டுப்போட்டியில் 12 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில்
முதலிடத்தை பெற்றனர். தடகளப்போட்டியில் தர்ஷினி நீளம் தாண்டுதலில்
முதலிடமும், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், உயரம்
தாண்டுதல் போட்டியில் 2ம் இடமும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்சிப்
பட்டத்தை பெற்றார். குண்டு ஏறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டியில் ஆர்ய
சுஷாந்த் முதலிடம் பெற்றார். திவ்யதர்ஷினி குண்டு எறிதல் போட்டியில்
முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். குண்டு
எறிதல் போட்டியில் பிரணீத் முதலிடமும், சகானா இரண்டாமிடமும் பிடித்தார்.
வட்டு எறிதல் போட்டியில் மேகா இரண்டாம் இடம் பிடித்தார். உயரம் தாண்டுதல்
அக் ஷிந்தியா முதலிடமும், தர்ஷன் மூன்றாமிடமும், தாரண்யா நான்காம்
இடமும் பெற்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் யுகா நான்காம் இடம் பிடித்தார்.
கோவை பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு
போட்டியில் 12 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கனிஷாஸ்ரீ 50 மீட்டர் ஓட்ட
ப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடமும், விதுல் கார்த்திக் மென்பந்து
வீசுதல் போட்டியில் இரண்டாமிடமும், ஸ்ரீநிசா 75மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
மூன்றாம் இடமும், தர்ஷினி எம்டி நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், 100 நமீ
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும் பிடித்தார்.
பள்ளி தாளாளர் ஆர்.சுப்ரமணியம், செயலாளர் தமிழ்ச்செல்வன், பள்ளி
நிர்வாகிகள் மகேஷ்வரி மற்றும் தங்கமணி, பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி
ஆகியோர் பாராட்டினர்.
No comments