பொள்ளாச்சியில் 23ம் தேதி மாரத்தான்
பொள்ளாச்சி,நவ.21-
புற்று நோயாளிகளுக்கு நிதி உதவி செய்யவும் ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வரும் 23ஆம் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் கல்லூரி வளாகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மிராக்கிள் ஹெல்த் சென்டர் செயல்பட்டு வருகிறது.
இங்கு அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, சித்தா உள்ளிட்ட மருத்துவங்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிதி திரட்டும் நோக்கில் வரும் 23ஆம் தேதி மிராக்கில் மாரத்தான் நடைபெற உள்ளது. இதுகுறித்து NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் பத்திரிக்கையாளர் களிடம் இந்த தகவல்களை தெரிவித்தார்.
உடன் பத்லடிக் அசோசியேசன் நிர்வாகி சீனிவாசன் டாக்டர் மகாலிங்கம் கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முதல்வர் அசோக், திட்ட அலுவலர் நாகராஜன் உட்பட பலர் இருந்தனர்
போட்டிகளில் பங்கேற்க 98659 07649 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments