பூமி பூஜையை துவக்கி வைத்த எம் எல் ஏ செ. தாமோதரன்
கிணத்துக்கடவு தொகுதி கோவை 100வது வார்டு கணேசபுரம் பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15,00,000/- மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையை எம் எல் ஏ செ. தாமோதரன் தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை ஏ. சண்முகம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, டிவிசன் செயலாளர்கள் தியாககுமார், வெங்கடேஷ், வேலுச்சாமி, மோகன் , முன்னாள் வார்டு உறுப்பினர் விஜயன், தயாளன், கமலக்கண்ணன், உஷா, சாந்தி, பாஜக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கார்த்தி, முருகேசன், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments