மாநில அளவில் முதலிடம் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
இரத்த வங்கிக்கு மருத்துவ பயனாளிகள் நலச்சங்கம் சார்பில் பாராட்டு
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக இயங்கி வரும் இரத்த வங்கிக்கு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தேசிய தன்னார்வலர்கள் இரத்த தான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாநில அளவில் முதலிடம் வழங்கப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பாக இயங்கி வரும் இரத்த வங்கி கடந்த ஆண்டில் பல்வேறு இரத்ததான முகாம்கள் நடத்தி இயங்கியதால்
முதலிடம் பெற்றுள்ளது .
முதலிடம் பெற்ற மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவமனை மருத்துவ பயனாளர்கள் நல சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர். ராஜா, இருப்பிட மருத்துவர் மற்றும் இரத்த வங்கி அதிகாரி டாக்டர். மாரிமுத்து. குழந்தைகள் நல மருத்துவர் செல்வராஜ். செவிலியர்கள் . இரத்த வங்கி செவிலியர்கள் தேன்மொழி அன்னக்கொடி மற்றும் லேப் டெக்னீசியன் மகாலட்சுமி மற்றும் மருத்துவ பயனாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ், கவிஞர் .முருகானந்தம், மண்ணூர் ராமர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments