Breaking News

ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்கவேண்டும் கேரள அமைச்சரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை




பொள்ளாச்சி, அக்.5-
பொள்ளாச்சி நாராயண குரு சமாஜ நிகழ்ச்சிக்கு வந்த கேரள அமைச்சரிடம் ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் கோரிக்கை வைத்து பேசினார்.
 பொள்ளாச்சி நாராயணகுரு சமாஜத்தின் ஆண்டுவிழா மற்றும் ஓணம் விழா நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் நிர்வாகிகள் சிவபிரகாஷ், கொச்சப்பன், சகாதேவன், கண்ணன், வினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஈழுவா-தியா பேரமைப்பு தலைவர் செந்தாமரை சிறப்புரையாற்றினார். 
கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பாபு (நெம்மாறை கேரளா) எம்பிக்கள் ஈஸ்வரசாமி, ஸ்ரீகாந்தன்(பாலக்காடு கேரளா) கேரளா நாராயண தர்மா சங்கம் நிர்வாகி சச்சிதானந்தா, பொள்ளாச்சி நகராட்சித்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கொமதேக மாநில நிர்வாகி நித்தியானந்தம், பொள்ளாச்சி வழக்குரைஞர் சங்கத்தலைவர் துரை, மூத்த வழக்குரைஞர் அதிபதி, கேரள மின்வாரிய இயக்குனர் முருகதாஸ், கேரளா சமாஜ் தலைவர் சோமன்மேத்யூ உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது...கேரள, தமிழக மக்கள் சகோதரர்கள். ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதற்கு அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உதவி செய்யவேண்டும். இந்த திட்டங்களில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி தமிழக மக்கள் காய்கறி விவசாயம் அதிகம் செய்து கேரள மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவார்கள் என்றார்.

---



No comments