காவலர் நலச் சங்க கூட்டம்
கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 11.10.25 ந தேதி பொள்ளாச்சி காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
தலைவர் திரு.P.செல்வராஜ் அவர்கள் தலைமையில்,
செயலாளர் திரு. R.பாலன் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிகப்படியான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும்
காவல்துறையில் பணிபுரிந்து இறந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிதாரர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி கொடுத்த வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிய
திரு.சக்திவடிவேல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
திரு.T. ராமலிங்கம் உதவி ஆய்வாளர் அவர்கள் [ஓய்வு] காவலர் நலச் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
J. குணசேகரன் மாநில தலைவர், தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளிடம் கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக தனக்கு சாதகமாக உள்ள நிர்வாகிகளை மட்டும் வைத்துக் கொண்டு 05.10.25 ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். தவறாக செயல்பட்ட மாநில தலைமையை கண்டித்தும், மாநில தலைமையோடு கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் இனி இணைந்து செயல் படாது எனவும்
கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் தனிப்பட்ட முறையில் இயங்கும் என்ற தீர்மானத்தையும் ஏக மனதாக கடந்த மாதம் உறுதி செய்ததை மீண்டும் உறுதி செய்து நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் திரு.
மைக்கேல் சகாயராஜ் அவர்கள் கூட்டம் நடத்துவதற்கு காவலர் சமுதாயக் கூடத்தை கொடுத்து உதவிய மரியாதைக்குரிய காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் பொள்ளாச்சி அவர்களுக்கும் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக தேசிய கீதம் பாடியும் கூட்டம் முடிக்கப்பட்டது.
No comments