பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உலக காய தினம் நிகழ்வு
இன்று பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உலக காய தினம் (அக்டோபர் 13-17) ஆடியோ பல்நரை மறு உயிர் பிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக இன்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு எப்பொழுதெல்லாம் 108 கூப்பிட வேண்டும் ,கூப்பிட்டவுடன் 108-ல் முதலுதவி என்ன செய்வார்கள் ?எப்படி மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு வருவார்கள் ,தலைக்காயம் ஏற்பட்டவுடன் நினைவு இல்லாத போது அவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது , தண்டுவட கழுத்து எலும்பில் அடிபட்டி இருந்தால் அவரை கழுத்து அசையாமல் வைக்க வேண்டும், முதல் உதவி என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் விளக்கி கூறினார்கள்.
ஒருவருக்கு நெஞ்சுவலி அல்லது நினைவிழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு செயல்முறை மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
2) மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருவர் திடீரென்று மயங்கி விட்டால், அல்லது விபத்து மூலம் காயம் ஏற்பட்டு விட்டால் - அவர்களுக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்? மருத்துவமனைக்கு அவர்கள் வந்த பிறகு மருத்துவ கருவிகள் மூலம் எப்படி அவர்களை சுய நினைவுக்கு கொண்டு வருவது ,இதயத்துடிப்பு திரும்பிக் கொண்டு வருவது ,நெஞ்சுவலி இருந்தால் அவர்களுக்கு என்ன சிகிச்சை முறைப்படி அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு செயல்முறை மூலம் விளக்கி கூறினார்கள்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். ராஜா தலைமையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .
அறுவை சிகிச்சை பகுதியின் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் , பொது மருத்துவ துறை தலைவர் -டாக்டர் .வனஜா மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் ,செவிலியர்கள் ,மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments