Breaking News

கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த எம்எல்ஏ செ.தாமோதரன் கோரிக்கை





கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ., செ.தாமோத ரன் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

விபரம்....

கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், வச திகள் இன்னும் பூர்த்தியா கவில்லை. அடிப்படை வசதிகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட் டாலும், நடைமேடை போன்ற வசதிகள் குறை வாகவே உள்ளது.

 ரயிலின் நீளத் திற்கு ஏற்ப பிளாட்பார்ம் நீளத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். இத் துடன் பயணியர் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ரயில்வே ஸ்டேஷன் பின்புறத்தில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.

இங்கு ரோடு அமைந் தால், கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் இருந்து எளிதாக பஸ் பயணம். செய்யலாம். பொது மக்கள் வருகை அதி கரிக்கும். இத்துடன் இவ்வழியில் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்கலாம். எனவே, பயணியர் நலன் கருதி பிளாட்பார்ம் நீட்டிப்பு, ரோடு அமைத்தல் உள் ளிட்ட பணிகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments