Breaking News

பொள்ளாச்சியில் லோக் அதாலத்



பொள்ளாச்சி, செப்.14-
பொள்ளாச்சியில் நடைபெற்ற லோத் அதாலத்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா காணொளி காட்சி வாயிலாக துவங்கிவைத்தார். 
 நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்ற லோக் அதாலத்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். சப்-கோர்ட் நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார்.  குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் சரவணக்குமார், பிரகாசம், முதன்மை மாவட்ட  உரிமையியல் நீதிபதி சுஜாதா, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 லோக் அதாலத்தில் விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வழக்குரைஞர் சங்கத்தலைவர் துரை, வழக்குரைஞர்கள் பிரவீன், வெங்கடேஷ், வேலு, மயில்சாமி, மதிசேகர், அருள்பிரகாஷ், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். 
மோட்டார் வாகன விபத்துக்கள் 120 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 70 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்  உள்பட போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக 603 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 563 வழக்குகளுக்கு ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 500க்கு தீர்வு காணப்பட்டது. காசோலை மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சப்-கோர்ட்டு, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல்  முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்.1, ஜே.எம்.2, ஆகிய கோர்ட்டுகளில் உள்ள 2191 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மொத்தம் 905 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.6 கோடியே 70 லட்சத்து 37 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.

---



No comments