பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்
காங்கிரஸ் கட்சி கோரிக்கை
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். புதிதாக மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள சக்திவேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
பொள்ளாச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு முதல்வர் நேரில் சிலை திறந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சியை மாவட்டமாக வேண்டும், தெரு நய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அது அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது.
No comments