Breaking News

பாரதியார் பல்கலை விளையாட்டுப் போட்டியில் எஸ் டி சி கல்லூரி சாதனை

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் 
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் கோவை காரமடை டாக்டர் ஆர் வி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
 பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேட்டக் கல்லூரிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்ற பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர்கள் மனீஷ், மோகன்குமார், திலீப் ரோஜர், அனு தேவ், புவனேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டாம் இடத்தை கைப்பற்றினர். 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் வெங்கடேஷ், துணைத் தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி, முதல்வர் வனிதாமணி, உடற்கல்வித்துறை இயக்குனர் மற்றும் துணை முதல்வர் பாரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

No comments