Breaking News

எதிர்கால சவால்களுக்கு மாணவர்கள் முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டும் சக்தி குழுமத்தலைவர் ம.மாணிக்கம் பேச்சு





பொள்ளாச்சி, ஆக.21-
எதிர்கால சவால்களுக்கு மாணவர்கள் முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டும் என சக்தி குழுமத்தலைவர் ம.மாணிக்கம் தெரிவித்தார்.
 பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் 2025-26ம் கல்வி
ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.சி.ஏ.,
பாடத்திட்டங்கள் துவக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் வி.எஸ்.சுப்ரமணியன் வரவேற்றார்.
 கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர்
செந்தில்குமார் துறை தலைவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
 சக்தி குழுமத்தலைவரும், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவருமான 
ம.மாணிக்கம் தலைமை வகித்து பேசும்போது,வேகமாக மாறிவரும் உலகில்,
முக்கியமான நிகழ்வுகள் குறித்த செய்திகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும், எதிர்கால சவால்களுக்கு தயாராக சர்வதேச செய்திகளை தெரிந்து
வைத்துக்கொள்வது முக்கியம் என்றார்.
 கல்வியில் சிறந்த 150 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக அருட்செல்வர் வித்யா சக்தி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் 
மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் அல்லது
பேருந்து கட்டணம் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். இதன் மதிப்பு
2 கோடி ரூபாய் ஆகும். 
கல்லூரித்தாளாளர் ஹரிஹரசுதன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக
சென்னை மொபிவெயில் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இய
இயக்குனர் சீனிவாசன் பங்கேற்றார்.
 முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும்
 வகையில் முன்னாள் மாணவர் காபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டது. 
கல்லூரி முன்னாள் மாணவரும், அமெரிக்க நிதி சேவை நிறுவனமான அமெரிக்கன்
எக்ஸ்பிரிஸ் பொறியியல் இயக்குனர் விஸ்வநாதன் வைத்தியநாதன் கெளரவ
விருந்தினராக பங்கேற்றார்.
 விழாவில், கல்லூரி டீன் ராமகிருஷ்ணன்,  இணை டீன்கள் விஜயகுமார், சுதாகர், 
கண்ணபிரான், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக், 
பொது தொடர்பு அலுவலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

-----


No comments