குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்
பொள்ளாச்சி, ஆக.21-
பொள்ளாச்சி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 19 மற்றும் 20ம் தேதியில் நடைபெற்றது.
போட்டிகளை எம்எல்ஏ உடுமலை ராதாகிருஷ்ணன், சங்கவி வித்யா மந்திர்பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் வனிதாமணி, மூத்த உடற்கல்வி ஆசிரியர் கோபால்சாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.
14 வயதிற்குட்பட்ட மாணவியர்கள் பிரிவு கூடைப்பந்துபோட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கால்பந்துப்போட்டியில் வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வாலிபால் போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எறிபந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலிடமும், கோ-கோ போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கைப்பந்து போட்டியில் வதம்பச்சேரி எஸ்சிஎம் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பூப்பந்துபோட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கபடிப்போட்டியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி முதலிடமும், மேசைப்பந்து போட்டி ஒற்றையர், இரட்டையர் பிரிவுப்போட்டியில் குட்செப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் கைப்பற்றின.
17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கால்பந்து போட்டியில் வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வாலிபால் போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எறிபந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கோ-கோ போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கைப்பந்துபோட்டியில் காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பூப்பந்து போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கபடி போட்டியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி முதலிடமும், மேசைப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் ஆதித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், இரட்டையர் பிரிவில் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன.
19 வயிதற்குட்பட்டோர் மாணவியர்கள் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் ஏஎம்எஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கால்பந்து போட்டியில் வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், வாலிபால் போட்டியில் செஞ்சேரிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கால்பந்து போட்டியில் வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வாலிபால் போட்டியில் செஞ்சேரிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எறிபந்து போட்டியில் ஏஎம்எஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கோ-கோ போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கைப்பந்து போட்டியில் எஸ்ஆர்என்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பூப்பந்து போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கபடி போட்டியில் எஸ்ஆர்என்வி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்தன.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் துணைமுதல்வரும், உடற்கல்வி இயக்குனருமான பாரதி செய்திருந்தார்.
---
குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்
Reviewed by Cheran Express
on
August 21, 2025
Rating: 5
No comments