Breaking News

பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம்



பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய அளவிலான அதிமுக பாஜக தாமாக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மின்னல் மஹாலில் நடைபெற்றது. 

மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ. சக்திவேல் தலைமை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பொள்ளாச்சி வி. ஜெயராமன் பங்கேற்று வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

வெற்றி பெறுவதற்கான முக்கிய ரகசியங்களை எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன், மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தாமாக மாவட்ட செயலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments