டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி சக்தி ஹேக்கத்தான் போட்டி புதன்கிழமை துவங்கியது.
கல்வி மற்றும் தொழில்துறையை இணைக்கும் நோக்கத்தில் சக்தி குழுமத்தின் உணவு, போக்குவரத்து,வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருந்து பெறப்பட்ட சிக்கல்களுக்கு மாணவர்கள் புதுமையான தீர்வுகளை உருவாக்கி, மாதிரிகள் தயாரித்து தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்குகின்றனர்.
துவக்க விழாவில் கல்லூரி துணை முதல்வர் அ.செந்தில்குமார் வரவேற்றார். மாணவர் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் சுதாகர் அறிமுக உரையாற்றினார். மொத்தம் 1000 விண்ணப்பங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச்சேர்ந்த 61 அணிகள் தேர்வு
செய்யப்பட்டு 25 தலைப்புகளில் அறிக்கைகள் இடம்பெற்று உள்ளன. வியாழக்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. டீன்கள் கண்ணபிரான், விஜய்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments