பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தினருக்கு திகார் சிறை காத்திருக்கிறது எம் எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேச பேச்சு
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
எம் எல் ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக நிர்வாகிகள் ஏ. வெங்கடாசலம், விஜயகுமார், தாமாக நிர்வாகி குணசேகரன், பாஜக நிர்வாகிகள் வசந்த ராஜன், சந்திரசேகர், துரை, பரமகுரு மணிகண்ட குமார், அதிமுக நிர்வாகிகள் கஸ்தூரி வாசு, ஆர் ஏ சக்திவேல், ஜேம்ஸ் ராஜா, கனகு, குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் எம் எல் ஏ பேசியது... பொள்ளாச்சி நகராட்சியில் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு அதிகமான வரி வசூல் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் காலை முதல் மாலை வரை கடை விரித்து வைத்து லஞ்சம் வாங்குகின்றனர். இதற்கு நகராட்சி ஆணையரும் உடந்தையாக இருந்து வருகிறார்.
பழைய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி அவர்களை நேரில் வரச் சொல்லி அதிகம் வரிவிதித்து விடுவோம் என மிரட்டி லஞ்சம் வாங்குகின்றனர்.
குப்பையில் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.
அனைத்து நிலைகளிலும் பொள்ளாச்சி நகராட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.
இதை திமுக கவுன்சிலர்களே கவுன்சிலர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து உறுதி செய்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஆணையர் திகார் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி வைத்துவிட்டது.
இதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது.
வரும் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். 
No comments