சமத்தூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி அடுத்த சமத்தூரில் உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. பரம்பரை அறங்காவலராக கந்தசாமி உள்ளார். இந்தக் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 11ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடையூறு., இந்தக் கோவிலின் மேற்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரண்டு தென்னை மரங்கள் கோயில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில் உள்ளது. இந்தத் தென்னை மரத்திலிருந்து விழும் மட்டைகள், குறும்பைகள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீது விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மேலும் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் பக்தர்கள் மீது தென்னை மட்டை, குறும்பைகள் போன்றவை விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் கோயில் நிர்வாகத்தினர் உள்ளனர். அந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கோவில் நிர்வாகம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments