சமத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் உதவி
சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, கடந்த கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற ஆறு மாணவர்களுக்கு அதே பள்ளியில் 1998-1999 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் அமைப்பாகிய ஸ்டார் அசோசியேஷன் சார்பாக, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2000 ரூபாய், மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 1500 ரூபாய்  என பரிசுத்தொகை மற்றும் கேடயங்களும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சேர்ந்து வழங்கினர். 
இவ்விழாவில், ஊர்பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்...
No comments