Breaking News

எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

எம் எல் ஏ பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் 

எம் எல் ஏ பொள்ளாச்சி.V.ஜெயராமன் பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  சரவண நவீன், நகர பாசறை துணை செயலாளர் நவாஸ், வரதராஜ பிரபு ஆகியோர் ஏற்பாட்டில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. எம் எல் ஏ  பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து,பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில், பொள்ளாச்சி நகர செயலாளர் V.கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய  செயலாளர் R.A.சக்திவேல், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய  செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  ரகுபதி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் O.K.முருகன்,  PVJ. அக்னீஸ் முகுந்தன், பிரவீன் ஜெயராமன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழகமுன்னோடிகள் பங்கேற்றனர்.

No comments