Breaking News

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு விருது


டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு விருது
பொள்ளாச்சி, ஜூலை.4-
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு கிரேட் பிலேஸ் டூ ஒர்க் என்ற உலகளாவிய அமைப்பு  கிரேட் மிட் சைஸ் வொர்க்பிளேஸ் என்ற விருதை வழங்கியுள்ளது.
  என்ஐஏ நிறுவனங்களின் ஒரு அங்கமாக உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு இந்தியாவின் சிறந்த நடுத்தர அளவிலான  வேலை நிறுவனங்கள் பட்டியலில் 3வது இடத்தை பெற்றதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் 
எம்.ஹரிஹரசுதன் விருதை பெற்றார். உடன் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் முதன்மை ஆலோசகர் ஆர்.கார்த்திகேயன், இணைச்செயலாளர் எஸ்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர்.

No comments