தென்னிந்திய அளவிலான கபடி போட்டி ஒரு லட்சம் பரிசு
தென்னிந்திய அளவிலான கபடி போட்டி ஒரு லட்சம் பரிசு
தென்னிந்திய அளவிலான கபடி போட்டி 1 லட்சம் ரொக்க பரிசு லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார்.
சூலூரில் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார்.
சூலூரில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், கோவை Best&Co சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை Best&Co தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் துவக்கி வைத்து, வெற்றி பெற்ற அணிக்களுக்கு ரொக்க பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.
இறுதியில் நடைபெற்ற
பரிசளிப்பு விழாவில்
முதலிடம் திருவண்ணாமலை
அணிக்கு ரூ.40,000 ரொக்கப் பரிசும் இரண்டாமிடம்
சென்னை அணிக்கு ரூ. 30.000 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற
கேரளா அணிக்கு ரூ. 20.000 ஆயிரம்,
நான்காமிடம் பெற்ற திருப்பூர் அணிக்கு ரூ. 20.000 ரொக்க பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், தெற்கு
ஒன்றிய செயலாளர் மன்னவன்,
சர்வதேச நடுவர் கோபால்,
தமிழ்நாடு அமெச்சூர் தேர்வு குழு உறுப்பினர் சூலூர் சண்முகம், லயன்ஸ் தர்மராஜ்,
வழக்கறிஞர் எர்னஸ்ட் ராபின் மற்றும் கபடி விளையாட்டு வீராங்கனைகள்
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments