Breaking News

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்கவிழா

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. என்ஐஏ கல்வி நிறுவனங்களின் இணைச்செயலாளர் எஸ்.வி.சுப்பிரமணியன் வரவேற்றார். என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி தலைமை வகித்தார். ஸ்குவாட் படையின் கமாண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிரிசிசன் குழும நிறுவனத்தின் தலைவர் கே.பாலசுப்பிமணியம், கல்லூரி முன்னாள் மாணவர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அசோக் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் அழகப்பா ஆறுமுகம், தலைவர் கலைமணி, பொருளாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments