Breaking News

பங்குத் தந்தையர்கள் பணியிட மாற்றம்



கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபையின்   தேவாலயங்களில் பணியாற்றும் பங்கு தந்தையர்களின் பணியிட மாற்றம் ஒரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பு வகித்து வந்த பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயப் பங்குத் தந்தை 
அருட்.திரு.ஜேக்கப் அடிகளார் பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு கோவை மறைமாவட்டம் சூலூர் புனித சகாய அன்னை ஆலயத்தின் புதிய பங்குத் தந்தையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். 

மேலும் பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு புதிய பங்குத் தந்தையாக கோவை - மயிலேறிபாளையம் நல்லாயன் குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அருட்தந்தை திரு.லாரன்ஸ் அடிகளார் அவர்கள் அவர்களை கோவை மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு.ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு.தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களால் பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். 

இவர் கடந்த 06.06.2025 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொறுப்பெடுத்துக்கொண்டார்.இவருக்கு அருட்திரு ஜேக்கப் அடிகளார் அவருக்கு பதிலாக புதிதாக பொள்ளாச்சி மறை வட்டார முதன்மை குருவாக பொறுப்பேற்றுக்கொண்ட வால்பாறை தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை 
அருட்திரு.ஜெகன் ஆண்டனி அடிகளார் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அருட்தந்தை திரு.லாரன்ஸ் அடிகளார் அவர்கள் தனது துறவற வாழ்வில் இருபத்தைந்து ஆண்டுகள் குருத்துவ கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றி இறுதியாக அதன் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.இடைப் பட்ட காலத்தில் ரோம் நாட்டுக்கு சென்று அங்கு பரிசுத்த வேதாகமத்தை நன்கு கற்றறிந்து PHD டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார்.

அருட்தந்தை திரு லாரன்ஸ் அடிகளார் அவர்களை முன்னாள்  பங்குத்தந்தை அருட்திரு.ஜேக்கப் அடிகளார் 

கருமத்தம் பட்டி புனித ஜெபமாலை மாதா பசிலிக்காவின் அதிபரும் மறை வட்ட முதன்மை குருவுமான 
அருட்தந்தை 
திரு.அருண் அடிகளார் 

மாதா தொலைக்காட்சி இயக்குனர் 
அருட்தந்தை திரு.வின்சென்ட் அடிகளார் 

கோவை சேரன் மாநகர் ஆலய பங்குத் தந்தை
அருட்திரு.ஆண்ட்ரு அடிகளார் 

பல்லடம் ஆலய பங்குத் தந்தை 
அருட்திரு. ஞானப்பிரகாசம் அடிகளார் 

முடீஸ் ஆலய பங்குத் தந்தை 
அருட்திரு பெனிட்டோ அடிகளார் 

கோவை மறை மாவட்ட இறைமேய்ப்புப் பணி இயக்குனர் 
அருட்திரு.ஆன்டனி யேசுராஜ் அடிகளார் மற்றும் 

ஆனைமலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத் தந்தை அருட்திரு. ஆரோக்கிய தாஸ் அடிகளாரும் கலந்து கொண்டு ஆலயத்தில் நன்றி கூட்டுப் பாடற்திருப்பலி நிறைவேற்றியும்,இறை ஆசீர் வழங்கினர்.

புதிதாக பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பு எடுத்துக் கொண்ட வால்பாறை தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை அருட்திரு.ஜெகன் ஆண்டனி அடிகளார் மற்றும் 

பொள்ளாச்சி புனித லூர்துணை ஆலய பங்குத்தந்தை அருட்திரு.லாரன்ஸ் அடிகளார் ஆகியோருக்கு இவர்களது பணி சிறக்க கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

முடிவில் இறைமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர் இந்த நாளில் முன்னால் பங்குத் தந்தை அவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்வும் புதிய பங்குத் தந்தை அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் இறை ஆசீரோடு இனிதாய் நடைபெற்றது.

இறுதியில் பாப்பரசர் பண் இசையோடு நிறைவு பெற்றது

No comments