Breaking News

பொள்ளாச்சியில் புற்றுநோய் கருத்தரங்கு


பொள்ளாச்சியில் புற்றுநோய் கருத்தரங்கு

பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில் புற்றுநோயியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
 சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் துவக்கி வைத்தார். மிராக்கிள் மையத்தின் தலைமை மருத்துவர் பிரதீப் தலைமை வகித்தார். மருத்துவர்கள் விஜாநேமா, செந்தில்குமார், சரண்யன், ஜினாசா, சுதர்சன், சிவரஞ்சினி உட்பட பலர் பேசினர். இந்த மையம் புற்றுநோயை நாள்பட்ட வளர்சிதை மாற்ற நிலையாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. நோயாளிகளுக்கு இந்த மையத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது குறித்து பேசப்பட்டது. நிகழ்வில், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி, இணைச்செயலாளர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

---

No comments