ஆபத்தாக மாறுகிறதா ட்ரக் தமிழ்நாடு திட்டம்?
ஆபத்தாக மாறுகிறதா ட்ரக் தமிழ்நாடு திட்டம்?
ட்ரக்கிங் சென்றவர் மரம் ஏறி வீடியோ வெளியீடு
தமிழக வனத்துறையின் ஒரு திட்டமான டிரக் தமிழ்நாடு திட்டம் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.
பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் உயிர்நாடியாக கருதப்படும் கான்டூர் கால்வாயில் ட்ரக்கிங் சென்ற ஒருவர் கான்டூர் கால்வாய், சர்க்கார்பதி மின் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தை பற்றி தெரியாத நபர்கள் ட்ரக்கிங் சென்று இப்படி வீடியோ வெளியிடுவதால் கான்டூர் கால்வாயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டாப்ஸ்லிப் ட்ரக்கிங் சென்ற மருத்துவர் ஒருவர் சமீபத்தில் மூச்சு திணறி உயிரிழந்தார்.
இந்நிலையில், டிரக் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டாப்ஸ்லிப் ட்ரக்கிங் சென்ற நபர் ஒருவர் மரம் ஏறி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் தற்போது பதிவிட்டுள்ளார்.
இப்படி ட்ரக்கிங் செல்பவர்கள் ஆபத்தை உணராமல் மரம் ஏறுவதால் தவறி விழுந்து உயிர் இழந்தால் அது வனத்துறைக்கு பாதகமாக அமைந்து விட வாய்ப்புள்ளது. பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக பகுதிக்குள் டிரக்கிங் செல்லும் போது பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டாமா? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் டிரக்கிங் செல்லும் போது வழிகாட்டிகள் உடன் செல்கிறார்களா என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
டிரக் தமிழ்நாடு திட்டத்தில் வருவாயை மட்டும் வனத்துறையினர் முக்கியமாக கருதாமல், ட்ரக்கிங் செல்பவர்களின் உயிர்களின் பாதுகாப்பு அவர்கள் செல்லும் வனப்பகுதியின் பாதுகாப்பு, அங்கு உள்ள நீர் மின் திட்டங்களின் பாதுகாப்பு, வன உயிரினங்களின் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் சுரேஷ் கூறுகையில்...
ட்ரக் தமிழ்நாடு திட்டம் வருவாயை மட்டும் முக்கியமாக கருதுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. ட்ரக்கிங் செல்லும் இடங்களில் உள்ள வனப்பகுதிகளின் பாதுகாப்பு, ட்ரக்கிங் செல்பவர்களின் உயிர் பாதுகாப்பு போன்றவற்றை அவர்கள் கவனிப்பதில்லை என தோன்றுகிறது என்றார்.
No comments