Breaking News

மாசாணியம்மன் கோவிலில் அதிமுகவினர் அன்னதானம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டும், போரில் இந்தியா வெற்றி பெற வேண்டியும் அதிமுக அம்மா பேரவை சார்பாக சனிக்கிழமை மாசாணியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அம்மா பேரவை மாவட்டச்செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன்,செ.தாமோதரன்,சூலூர் கந்தசாமி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரிவாசு, அதிமுக நிர்வாகிகள் கார்த்திக்அப்புச்சாமி, பிரகதீஷ், குணசீலன், விமல், சந்திரகுமார், விநாயகமூர்த்தி, மனோகரன், வெங்கடாச்சலபதி, செந்தில்குமார், திருஞானசம்பந்தம், குனியமுத்தூர் பாலு, கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


No comments