டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஆண்டுவிழா
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா வியாழன் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பி.கோவிந்தசாமி ஆண்டு அறிக்கை வாசித்தார். பெங்களூரு இன்போசிஸ் சைபர் பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கமலேஷ் சிங் தலைமை விருந்தனராக பங்கேற்றார். பெங்களூரு பிரிட்டிஷ் டெலிகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விநியோக மேலாளரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான அசோக்ராஜமாணிக்கம் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் சுந்தரேஷ்வராவிற்கு ரூ.20 ஆயிரம் பரிசும், அருட்செல்வர் விருதும் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கும் 9 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டது. 99 மாணவர்களுக்கு ரேங்க் ஹோல்டர் விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் மதன்குமார், தேஜஸ்வினி, நித்தின், நிதர்ஷனா ஆகியோர் என்சிசி விருதை பெற்றனர். மேலும் பல்வேறு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, இணை செயலாளர் எஸ்.வி.சுப்ரமணியன், துணை முதல்வர் செந்தில்குமார், டீன் ராமகிருஷ்ணன், இணை டீன்கள் விஜயகுமார், சுதாகர், கண்ணபிரான், கிஷோர், சித்ரா, பொது தொடர்பு அலுவலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
----
No comments