Breaking News

அரசு அலுவலர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு




 அரசு அலுவலர்களுக்கு 110 விதியின் 9 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கரோனா காலத்தில் நிதிநிலை சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலரக்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2 விழுக்காடு அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டது. பண்டிகை கால முன்பனம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி அறிவிப்பு. கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கியது, திருமண முன்பணம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, பொங்கல் பண்டிகைக்கு ஓய்வூதியதாரர்களுக்கு பரிசுத்தொகையை ஆயிரமாக உயர்த்தியது, ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பனம் உயர்த்தியது, பெண்களுக்கு மகப்பேறு விடுப்பிற்கான காலத்தை ஓராண்டாக உயர்த்தியது, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்தது என 9 அறிவிப்புகளை அரசு அலுவலர்களுக்கு 28ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கோவை மாவட்டத்தலைவர் இல.முரளி நன்றி தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments