Home
/
Unlabelled
/
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டக்குழுவினர் சம்மதம் பெறாவிட்டால் ராஜினாமா செய்வோம்
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டக்குழுவினர் சம்மதம் பெறாவிட்டால் ராஜினாமா செய்வோம்
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டக்குழுவின் சம்மதத்தை பெறாவிட்டால் திட்டக்குழுவினர் ராஜினாமா செய்வோம் என கண்காணிப்பொறியாளரிடம் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிஏபி திட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு திட்டக்குழுவின் சம்மதம் இல்லாமல் தண்ணீர் திறக்க அரசாணை பெறப்பட்டுள்ளதாக கூறி பிஏபி திட்டக்குழுவினர், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் பிஏபி அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..பிஏபி திட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு இந்த ஆண்டு மட்டும் இரண்டாது முறையாக தண்ணீர் திறந்துவிடுவதற்கு கண்காணிப்பு பொறியாளரால் பரிந்துரை செய்யப்பட்டு 7ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்து திட்டக்குழு மற்றும் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசானை திருமூர்த்தி அணை விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்றும், மேற்கண்ட அரசாரணையை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டக்குழு சார்பில் வழக்கு தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் இருவருக்கும் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். மேல் முறையீட்டு வழக்கில் திருமூர்த்தி அணையிலிருந்து உபரிநீர் வெளியேறி பாரதப்புழா ஆற்றில் தண்ணீர் கலக்கும் நிலையில் பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்கலாம் என 2023ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு வழங்கப்பட்ட பிறகு உபரிநீர் வெளியேறாததால் பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இரண்டாம் மண்டல பாசன காலத்தில் உபரிநீர் வெளியேறியதால் திட்டக்குழுவின் சம்மதம் பெற்று அரசு ஆணை பெறப்பட்டு ஏரிக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் விதி 23ன் படி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவின் சம்மதம் இல்லாமல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணைக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறைக்கு ஏற்கனவே 2012ம் ஆண்டில் அறிவுரை வழங்கியுள்ளார். இதுபோன்ற நிலை இருக்கும்போது, தற்போது சட்டத்திற்கு புறம்பாக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தண்ணீர் விட அரசு ஆணை பெறுவதற்கு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளது வேதனை அளிக்கிறது. எனவே பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும் அரசு ஆணையை நிறுத்தி வைக்குமாறும், அரசு ஆணையை ரத்து செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என நான்கு லட்சம் ஏக்கர் விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட அரசு ஆணையை ரத்து செய்யாமல் எங்களை புறக்கணித்தால் திட்டக்குழுவினர் பதவியை ராஜினாமா செய்வோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பிஏபி திட்டக்குழுவினர் தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் கண்காணிப்பு பொறியாளரிடம் நேரில் வழங்கியும், தங்கள் பிரச்சனைகளை தெரிவித்தனர்.
---
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டக்குழுவினர் சம்மதம் பெறாவிட்டால் ராஜினாமா செய்வோம்
Reviewed by Cheran Express
on
April 08, 2025
Rating: 5
No comments