பாதுகாப்பு கேட்டு சார் -ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு
தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு கேட்டு சார் -ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த காயத்ரி என்ற பெண் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
வசித்து வருகிறோம். அங்கு எங்களுக்கு சொந்தமான பூமியில் விவசாயம் செய்து வருகிறோம். என் கணவரின் தந்தை விஸ்வநாதன் மற்றும் எங்களுக்கும் பூர்வீக பூமி சொத்து சம்பந்தமாக பொள்ளாச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எனது கணவரின் தந்தை விஸ்வநாதன், ராஜசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து எங்களது அனுபவத்தில் இருக்கும் பூமியினை அடியாட்கள் உதவியோடு அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.
பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் எனது கணவரை அடியாட்களுடன் வந்து எங்களது தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டி வந்தார். தான் ஒரு கட்சியின் நிர்வாகி என்றும் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டி வருகிறார். மேற்படி பூமி சம்பந்தமாக புகார் மனுக்கள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளோம். அந்த மனுவும் நிலுவையில் இருந்து வருகிறது. இன்று சுரேஷ் சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்களோடு வந்து என்னையும் எனது கணவரையும் கொலை மிரட்டல் விடுத்ததோடு, என்னை பெண் என்று கூட பார்க்காமல் தேவையற்ற அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்.
மேலும் தோட்டத்தை விட்டு காலி செய்யாவிட்டால் உங்கள் அனைவரையும் காலி செய்து விடுவேன் என்றும் எங்களை மிரட்டினார். எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் சேரன் நகரை சார்ந்த சுரேஷ் மற்றும் அவரோடு வந்த அடியாட்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments