இன்று திருநீற்று புதன் (அ) சாம்பல் புதன்
05.03.2025
இதன் மையக் கருத்து மனிதன் மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் என்பதை நினைவு கூறும் நாள்
ஆம் மனிதனின் மீட்புக்காக இறைவன் யேசு மனிதனாக பிறந்து இப்பூமியில் நன்மையையே போதித்து மனிதர்களை நல்வழியில் நடக்க போதித்து வந்தார். ஆகவே பலர் அவரது வார்த்தைகளை ஏற்று வாழ்ந்து வந்தார்கள். அவர் போதித்தது எல்லாம் பிறறை அன்பு செய்யுங்கள் உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்
தன்னை நேசிப்பது போல் பிறறையும் நேசியுங்கள் என்பது தான்.
ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத மனிதர்கள் சிலர் அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
அவ்வாறு யேசுநாதர் மரித்த நாளை கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் புனித வெள்ளி என்று சொல்லி அந்த நாளை நினைவு கூறும் விதமாக நாற்பது நாட்கள் நோன்பு அனுசரித்து வருவார்கள். அதன் துவக்கமாக இன்று சாம்பல் புதன் நாள் அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளில் கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வார்கள் அவ்வேளையில் கத்தோலிக்க குருக்கள்
இறை மக்களின் நெற்றியில் திருச்சாம்பல் பூசி மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் எனச் சொல்லி மனம் வருந்தி மனம் திருந்தி வாழ அழைப்பு விடுக்கிறார்.
இதன் வழியாக மக்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப 40 நாட்கள் நோன்பிருந்து நன்மை செய்து வாழ்வார்கள்.
இன்று முதல் 40 நாட்களுக்கு ஆலய பீடத்தில் அலங்காரம் ஏதும் இன்றி வெறிச்சோடி இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயம் பாலக்காடு சாலையில் இந்த நிகழ்ச்சி துவங்கியது. அருட்திரு ஜேக்கப் அடிகளார் பங்குத்தந்தை தலைமை வகித்தார்.
No comments