பொள்ளாச்சியில் ஏழாம் தேதியுடன் ஜம்போ சர்க்கஸ் நிறைவு
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான பொள்ளாச்சியில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது.
ரஷ்யா, ஆப்பிரிக்கா, டான்சானியா உள்ளிட்ட வெளிநாட்டு கலைஞர்களின் பிரத்தியேக நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பேரழகிகள் மற்றும் திடகாத்திரமான இளைஞர்கள் இருளில் மின்னும் வண்ண உடை அணிந்து வளைந்து,நெளிந்து , தாவி, ஓடி செய்யும் சாகச நிகழ்ச்சிகள் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் சர்க்கசின் தனித்துவமான நிகழ்ச்சியான ஈருடலில் ஓர் உருவம் அரங்கேற்றிய பதுமை நடனம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காதலர்கள் போல பேலே(ballet) நடனமாடும் கலைஞர் ஒருவர் பெண் மற்றும் ஆணின் இரு வேறு உடை அணிந்து, இரு வேறு உருவங்களாக காட்சியளித்து சுழன்று - சுழன்று நடனமாடி பின்பு, இசையின் முடிவில் ஓர் உருவமாக காட்சி தருகிறார்.
இதனை பார்த்த பலரும் பிரமித்து ஆரவாரம் செய்து ரசித்தனர். மேலும் வண்ண ஒளியில், மிளிரும் உடையில் இசைக்கு ஏற்றவாறு மயில் நடனம்,சுழற் வட்ட சாகசம், கூண்டிற்குள் மோட்டார் சாகசம்,உருளைச்சக்கர சாகசம்,விளிம்பில் விளக்கு சாகசம்,பழமை மாறாத பறக்கும் பாவை சாகசம், நகரும் சக்கரத்தின் மரண விழும்பில் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தொடர்ந்து 3 மணி நேரம் இதில் அரங்கேறுகிறது. வடக்கிபாளையம் பிரிவில் தினசரி மூன்று காட்சிகள் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி உடன் நிறைவடைகிறது.
No comments