இந்திய மருத்துவ சங்க பொள்ளாச்சி கிளை புதிய நிர்வாகிள்
இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத்தலைவர் மருத்துவர் செங்குட்டுவன், மாநில செயலாளர் மருத்துவர் கார்த்திக்பிரபு, முன்னாள் மாநிலத்தலைவர் மருத்துவர் அபுல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று புதிய நிர்வாகிகளை அறிவித்தனர்.
இந்திய மருத்துவ சங்க பொள்ளாச்சி கிளையின் தலைவராக மருத்துவர் செந்தில்குமார், செயலாளராக மருத்துவர் ரகுராம், பொருளாளராக மருத்துவர் ஞானசுந்தர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments