திருமூர்த்தி மலையில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரிழப்பா?
திருமூர்த்தி மலையில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரிழப்பா?
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. திருமூர்த்தி மலையில் அருவி மற்றும் கோவில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வார்கள். கோவில் மற்றும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவுகளையும் அவ்வப்போது கொடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் குரங்குகளுக்கு உணவு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தினாலும் அதையும் மீறி சிலர் உணவு வழங்கி விடுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் உள்ள டேங்க் கவர்களையும் குரங்குகள் திறந்து பார்த்து உள்ளே இருந்து பொருட்களை சேதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தினசரி குரங்குகள் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரிழந்த இருக்கலாம் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குரங்குகளுக்கு யாராவது விஷம் வைத்து இருக்கலாம் அல்லது குரங்குகளுக்கு ஏதாவது தொற்று நோய் பரவி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே வனத்துறையினர் மற்றும் அரசு இந்த சம்பவத்தில் உள்ள உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments