பொள்ளாச்சி ஆர்சி சர்ச் தேர் திருவிழா
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் R C சர்ச் தேர் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு தேர் திருவிழாவில் அருட்தந்தை
ஜேக்கப் தலைமை வகித்தார். இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் திருவிழாவில் பங்கேற்றனர்.
பிராங்கிளின் ஜெயன்த் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.
புனித லூர்து அன்னையின் தேர் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு
பாலக்காடு ரோடு,
கோவை ரோடு சந்திப்பு,
மதராஸ் ஓட்டல் சந்திப்பு,
போஸ்ட் ஆபீஸ் ரோடு,
ராஜா மில்ரோடு,
SVV நாயுடு வீதி
மீண்டும் பாலக்காடு ரோடு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது.
மேலும் தேர் ஊர்வலத்தில் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் பாடிக் கொண்டு வந்தனர்.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முடிவில் மக்களுக்கு இறை ஆசீர் வழங்கப்பட்டது.
No comments