சைதை துரைசாமிக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது
பொள்ளாச்சி என் ஐ ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற நிறுவனர் தின விழாவில் சைதை துரைசாமிக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ப. நாச்சிமுத்து கவுண்டர் நினைவு நாளை என்ஐஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 71 ஆம் ஆண்டு நினைவு நாள் நிறுவனர் தின விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் வரவேற்றார்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம. மாணிக்கம் தலைமை வகித்தார். கொங்கு நாட்டு சாதனையாளர் விருது மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வியக நிறுவனர் சைதை துரைசாமிக்கு வழங்கப்பட்டது.
சக்தி குழுமங்களின் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா உரையாற்றினர்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி நன்றி கூறினார். நிகழ்வில், கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் சுப்பிரமணியம், முதன்மை ஆலோசகர் கார்த்திகேயன், வானவராயர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் கெம்பு செட்டி, முதல்வர் பிரபாகரன், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக், என்ஜிஎம் கல்லூரி மேலாளர் ரகுநாதன், முதல்வர் மாணிக்க செழியன், இயக்குனர் முத்துக்குமரன், சிம்ஸ் கல்லூரி இயக்குனர் ஷர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments