Breaking News

மாசாணி அம்மன் கோவிலில் புதிய ஜெனரேட்டர்

மாசாணியம்மன் கோவிலில் புதிய ஜெனரேட்டர்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய ஜெனரேட்டர் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. அதன் அடிப்படையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 125 கிலோ வாட் ஜெனரேட்டர் சுமார் 24 லட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் வெள்ளிக்கிழமை புதிதாக பொருத்தப்பட்டு அதற்குப் பூஜை செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் மஞ்சுளா தேவி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

No comments