நேதாஜி பிறந்தநாள் விழா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர் .வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார்.
பேரவை செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மலர் தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து
பொள்ளாச்சி என் .ஜி .எம் கல்லூரி முன்னாள் முதல்வர் ரெ. முத்துக்குமரன் மற்றும்
கல்லூரி முதல்வர் மாணிக்க செழியன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கல்லூரி மாணவ மாணவிகள் இடையே மாவீரர் நேதாஜி குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில்
மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், திமுக நகர துணை செயலாளர் ச. தர்மராஜ், தேமுதிக நகர செயலாளர் கணேசன், பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே. எம். சண்முகம்,
பட்டாம்பூச்சி இலக்கிய களம் கவிஞர்.முருகானந்தம், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிர்வாகி இக்பால், நகர மன்ற உறுப்பினர்கள் எம் .கே சாந்தலிங்கம், உமா மகேஸ்வரி, அதிமுகவை சார்ந்த ஜே எஸ் கிட்டான், சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வி. எஸ் ஆர் .கே . மோகன், காளிமுத்து, பஞ்சலிங்கம், தேவர் பேரவை சார்ந்த ராஜா, பசுமை குரல் அமைப்பைச் சேர்ந்த ஜெ.மகேந்திரன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேரவை நிர்வாகிகள் ஜபீர், விக்னேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரவை நிர்வாகி விக்கி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என். ஜி. எம் வரலாற்று துறை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments