Breaking News

தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதாக புகார்



கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பாதிப்பு ஏற்படுவதாக சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
 கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கான்கிரீட் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளாலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியேற்றும் கழிவுகளாலும் நிலத்தடிநீர், விவசாயம் போன்றவை பாதிக்கடுவதாகவும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சிங்கையன்புதூர் கிராமமக்கள் சார்பாக வியாழக்கிழமை பொள்ளாச்சி சார்-ஆட்சியர்அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டுவருவதால் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---

No comments