யானை தள்ளியதில் மின்வாரிய அதிகாரி ஜீப் கவிழ்ந்து
பொள்ளாச்சி அடுத்த நவமலை மின் உற்பத்தி நிலையத்தில் இளமின் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன். இன்று காலை நவமலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ஆழியாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு இரண்டு ஊழியர்களுடன் தனது பொலிரோ ஜீப்பில் சென்றுள்ளார். அப்போது, ஆதாலியம்மன் கோவில் அருகே ஜீப் சென்றபோது எதிர்பாராத விதமாக யானை ஒன்று வழிமறித்துள்ளது. ஜீப்பை பின்புறமாக நகர்த்த முயல்வதற்குள் யானை ஜீப்பின் முன் பகுதியை தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால், வனப்பகுதியில் உள்ள மரத்தில் சாய்ந்து நின்றது. யானை சென்றவுடன் ஜீப்பிலிருந்து இளமின் பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் உடன் இருந்த இரண்டு ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments