பூட்டிக் கிடக்கும் கனரா வங்கி ஏடிஎம்
பூட்டி கிடக்கும் கனரா வங்கி ஏடிஎம்
விவசாயிகளுக்கும், கிராமப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கனரா வங்கி சிறந்த சேவை வழங்கி வருகிறது. ஆனால், பொள்ளாச்சி கனரா வங்கி அதற்கு நேர்மாறாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நியூ ஸ்கீம் சாலையில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஏடிஎம் நீண்ட நாட்கள் ஆக பூட்டியே கிடப்பதாக தொடர்ந்து புகார் இருந்து வருகிறது.
இதனால், குறைந்த அளவு தொகை எடுக்க விரும்புபவர்கள் வங்கியை நேரில் தொடர்பு கொண்டு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் குறைந்த அளவு தொகை செலுத்துபவர்களுக்கும் இதே நிலைதான் இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பொள்ளாச்சி கனரா வங்கி கிளை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதே வாடிக்கையாளர்களின் தொடர் புகாராக உள்ளது.
முற்றுகை போராட்டம்... கனரா வங்கி ஏடிஎம் அடிக்கடி பூட்டப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவது தொடர்கதை ஆகிறது ஆகவே ஏடிஎம் இயந்திரத்தை தொடர்ச்சியாக பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்ன தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
No comments