புதிய பாஜக நிர்வாகிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்
கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக புதிதாக நியமிக்கபட்டுள்ள சந்திரசேகருக்கு எதிராக பாஜகவை சேர்ந்த நிர்வாகி கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதியில் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திரசேகர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதியில்
சந்திரசேகருக்கு எதிராக அக்கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அண்ணாமலையை தெற்கு மாவட்டத்திற்குள் வரவிடாமல் தடுத்த சந்திரசேகருக்கு மாவட்ட தலைவர் பதவியா? என்ற வாசகங்களுடன் பாஜகவைச் சேர்ந்த நடராஜன் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
சந்திரசேகர் பொருப்பு ஏற்று இரண்டு தினங்களில் எதிராக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பாஜகவினர். இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments